தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இந்திய ராணுவ தென் பகுதி புதிய தளபதி பொறுப்பேற்பு

 இந்திய ராணுவ தென் பகுதி புதிய தளபதி பொறுப்பேற்பு

 இந்திய ராணுவ தென் பகுதி புதிய தளபதி பொறுப்பேற்பு


ADDED : செப் 04, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 03:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இந்திய ராணுவ தென் பகுதி புதிய தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்த, லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர்.

நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை அலுவலர் கல்லுாரி, தேசிய பாதுகாப்பு கல்லுாரி ஆகியவற்றில், பயிற்சிகளை முடித்துள்ளார். மேலும், கான்பூர் ஐ.ஐ.டி-.,யில், கணினி அறிவியலில், தொழில்நுட்ப முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

இந்திய ராணுவ தென்பகுதி தலைவர் என்ற முறையில், லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், இப்பகுதியில் செயல்பாட்டு, தளவாட, நிர்வாக மற்றும் முன்னாள் வீரர்களின் நலன் சார்ந்த பொறுப்புகளை மேற்பார்வையிடுவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us