உள்ளடக்கத்திற்கு செல்ல

ஹெலிகாப்டரில் இருந்து குதித்து இந்திய வீரர்கள் பயிற்சி
ஹெலிகாப்டரில் இருந்து குதித்து இந்திய வீரர்கள் பயிற்சி
ADDED : ஜூன் 09, 2026 06:47 AM

அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: இந்திய கடற்படையில் புதிதாக தேர்வான வீரர்களுக்கு ராமேஸ்வரம், பாம்பன் கடலில் நீச்சல் பயிற்சி அளிப்பது வழக்கம். அதன்படி நேற்று உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் அருகே வந்தது.
கடற்படைக்கு புதிதாக தேர்வான இந்திய வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் குதித்தும், மீண்டும் கயிறு மூலம் ஹெலிகாப்டரில் ஏறியும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
