'இண்டியா' கூட்டணி தலைவர்கள் 'ஈகோ'வை கைவிட வேண்டும்: திருமா
'இண்டியா' கூட்டணி தலைவர்கள் 'ஈகோ'வை கைவிட வேண்டும்: திருமா
ADDED : பிப் 09, 2025 02:43 AM

மதுரை: “இண்டி கூட்டணி தலைவர்கள், 'ஈகோ' பிரச்னைகளை பின்னுக்கு தள்ளி நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
டில்லியில், பா.ஜ., வெற்றி பெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஆம் ஆத்மி இயக்கம், இவ்வளவு மோசமான பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை.
மொத்தத்தில், இண்டி கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்., தன்னை சுய பரிசோதனை செய்வது அவசியம்.
காங்.,-கும், ஆம் ஆத்மியும் ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இண்டி கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
தலைவர்கள், 'ஈகோ' பிரச்னைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும். லோக்சபா தேர்தல் மட்டுமல்ல; சட்டசபை தேர்தலிலும் கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் 100 சதவீதம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., தொண்டராக கவர்னர் ரவி இயங்கிக் கொண்டிருக்கிறார். தி.மு.க., ஆட்சிக்கு நெருக்கடி அளிக்கும் செயல்திட்டத்துடன் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

