இந்தியாவின் ஜி.டி.பி., மதிப்பு ரூ.360 லட்சம் கோடியை தாண்டும்
இந்தியாவின் ஜி.டி.பி., மதிப்பு ரூ.360 லட்சம் கோடியை தாண்டும்
ADDED : நவ 26, 2025 07:44 AM

புதுடில்லி: 'நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரத்தின் அளவு 4 டிரில்லியன் டாலர், அதாவது, கிட்டத்தட்ட 363 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்' என தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: கடந்த 10 ஆண்டுகளில், ஜி.டி.பி., மதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. உலகளவில் அரசியல் சூழ்நிலைகள் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், முக்கியத்துவத்தையும், சர்வதேச உறவுகளில் தன் பலத்தையும் நிலைநிறுத்த இந்தியாவுக்கு வலுவான பொருளாதார வளர்ச்சி கட்டாயம் தேவை.
தற்போது உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக திகழும் இந்தியாவின் ஜி.டி.பி., மதிப்பு 343 லட்சம் கோடி ரூபாய். வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், அடுத்த சில ஆண்டுகள், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தை சமாளிப்பது உள்ளிட்டவற்றுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

