இந்தியாவின் கடல்சார் எழுச்சி புதிய எல்லைகளை நோக்கிய பயணம்
இந்தியாவின் கடல்சார் எழுச்சி புதிய எல்லைகளை நோக்கிய பயணம்
ADDED : அக் 17, 2025 11:13 PM

நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ., நுாற்றாண்டுகளுக்கு முன், சோழர்கள் கடல்களை கடந்து இந்தியாவை தென் கிழக்காசியாவுடனும், அதற்கு அப்பாலும் இணைத்தனர். இன்று, பிரதமர் மோடியின் தொலைநோக்குடன் கூடிய வழிகாட்டுதலின் கீழ், பாரதம் அந்த பண்டைய கடல்சார் பண்பாட்டை மீட்டெடுத்து வருகிறது.
கடந்த 2015ல் துவங்கிய 'சாகர்மாலா திட்டம்' துறைமுக நவீன மயமாக்குதல், இணைப்பு மேம்பாடு, துறைமுகம் இணைந்த தொழில்துறை வளாகங்கள் உருவாக்கம் மற்றும் கடலோர சமூகத்தை வலுப்படுத்துதல் என்ற நான்கு துருவங்களை மையமாக வைத்து செயல்படுகிறது. இதுவரை, 1.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 272 திட்டங்கள் நிறைவேறி உள்ளன.
நிதி ஆதரவு இந்திய துறைமுக கொள்ளளவை, 2030க்குள் ஆண்டுக்கு 350 கோடி டன் ஆகவும், 2047க்குள் 1,000 கோடி டன் ஆகவும் விரிவுபடுத்தும் இலக்குடன், வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை அடிப்படை நோக்கமாக வைத்து, எழுச்சிப் பாதையில் பயணிக்கிறது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட, 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான, கப்பல் கட்டுமான தொகுப்பு, இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு, சிறப்பான ஊக்கமாக உள்ளது.
இதன் வாயிலாக, கப்பல் கட்டுமானத் துறைக்கு, அடித்தளத் துறை அந்தஸ்து வழங்கப்பட்டு, கடன் வசதிகள் எளிதாக கிடைக்கும் சூழல், குறைந்த வட்டி விகிதம் மற்றும் நிதி ஆதரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தன்னிறைவு இந்தியா இலக்கை வலுவூட்டுவதோடு, வேலைவாய்ப்புகள் உருவாகி, இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களின் போட்டித் திறனும் உயரும்.
தமிழகம், கடல்சார் மற்றும் தொழில்துறை எழுச்சி; இந்தியாவின் கடல்சார் மற்றும் தொழில் துறை மறுமலர்ச்சியின் மையமாக தமிழகம் திகழ்கிறது. 6,800 கி.மீ., துாரம் தேசிய நெடுஞ்சாலைகள், மூன்று முக்கிய துறைமுகங்கள், அறிவிக்கப்பட்ட 17 சிறு துறைமுகங்கள் ஆகியவற்றுடன், தமிழகம் ஒரு ஏற்றுமதி, இறக்குமதி மையமாக விளங்குகிறது.
இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 8.4 சதவீதம் பங்களிப்பு வழங்கி, தொழில்துறை உற்பத்தியில், 11 சதவீதம் பங்காற்றுகிறது.
சர்வதேச வர்த்தகம் கிட்டத்தட்ட 150 ஆண்டு பாரம்பரியமுள்ள சென்னை துறைமுகம்; அதன் துணை நிறுவனமான காமராஜர் துறைமுகம்; வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆகியவை இணைந்து, 2024 - 25ம் நிதியாண்டில் 14.51 கோடி டன் சரக்குகளை கையாண்டு, வரலாற்று சாதனை படைத்தன. 14 கோடி டன் இலக்கை தாண்டி, தமிழகத்தின் தொழில்துறை வலிமையையும், இந்தியாவின் வளர்ந்து வரும் கடல்சார் திறனையும் வெளிப்படுத்தி உள்ளன
வ.உ.சி., துாத்துக்குடி துறைமுகத்தின், வெளி துறைமுக விரிவாக்க திட்டம், பிரதமர் மோடியால் துவக்கப்பட்டது.
இந்த விரிவாக்கம், துறைமுகத்தின் ஆழ் கடல் கப்பல் வரத்து திறன் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி திறனையும் பெரிதும் உயர்த்தும்.
மேலும், இதன் வாயிலாக, தமிழக தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தகம் புதிய உயரத்தை எட்டும்.
தற்போது நடந்து வரும் முக்கிய பணிகளில், மதுரவாயல் - சென்னை துறைமுக மேம்பாலப் பாதை, மப்பேடு பன்முக போக்குவரத்து பூங்கா, வெளி துறைமுக விரிவாக்கத் திட்டம், ஆழ்த்துார்வாரல் திட்டம், சிறப்பு ரயில் இணைப்பு வழித்தடங்கள், பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி திட்டம் ஆகியவை அடங்குகின்றன.
இத்திட்டங்கள் துறைமுக கையாளும் திறனை மேம்படுத்தப்படும்.
மும்பையில், வரும் 27 முதல் 31 வரை நடக்கும், இந்தியா கடல்சார் வாரம் கண்காட்சி மற்றும் மாநாட்டில், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
ஒன்றிணைக்கின்றன இதன் வழியே, 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், முதலீட்டு வாய்ப்புகள் உருவாக உள்ளன.
இந்த விழா, இந்தியாவின் கடல்சார் வலிமையையும், தொழில்துறை திறன்களையும் வெளிப்படுத்தி, துறைமுகங்கள், கப்பல் கட்டுமானம், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் பசுமையான கடல்சார் வளர்ச்சியில், புதுமை மற்றும் உலக ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.
நுாற்றாண்டுகளுக்கு முன் கடல்கள் நாடுகளை பிரித்தன; இன்று, பிரதமர் மோடி பார்வையின்கீழ், அவையே நம்மை ஒன்றிணைக்கின்றன.