sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இண்டிகோ விமானம் கிளம்புவதில் தாமதம்; ஏசி கோளாறு: ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம்

/

இண்டிகோ விமானம் கிளம்புவதில் தாமதம்; ஏசி கோளாறு: ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம்

இண்டிகோ விமானம் கிளம்புவதில் தாமதம்; ஏசி கோளாறு: ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம்

இண்டிகோ விமானம் கிளம்புவதில் தாமதம்; ஏசி கோளாறு: ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம்


ADDED : பிப் 25, 2026 07:10 PM

Google News

ADDED : பிப் 25, 2026 07:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானத்தில் ஏசி சரியாக வேலை செய்யாததாலும், கிளம்ப 5 மணி நேரம் தாமதம் ஆனதாலும் , பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

சென்னையில் இருந்து காலை 7:30 மணிக்கு இண்டிகோ விமானம் 200 பயணிகளுடன் கிளம்ப இருந்தது. காலை 6:30 மணி முதல் பயணிகள் விமானத்தில் ஏற துவங்கினர். அவர்களில் குழந்தைகள், முதியவர்கள் அடக்கம். விமானத்தில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை. விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பாமல் 5 மணி நேரம் தாமதமாகியது. இதற்கான காரணம் குறித்து கேட்டு ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். இதனை சிலர் தங்களது மொபைலில்பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டனர்.

இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விமானத்தில், இயல்பானதை விட வெப்பநிலை அதிகமாக இருந்ததை விமானி கண்டுபிடித்து பொறியியல் குழுவினரிடம் தகவல் கொடுத்தார். மேலும், விமானிக்கான பணிநேரம் முடிவடைந்துவிட்டது. இதனால், மாற்று விமானியை ஏற்பாடு செய்வதில் காலதாதம் ஏற்பட்டது. இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பயணி ஒருவர் சமூகஊடகத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விமான நிறுவனத்திடம் இருந்து தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. உரியமுறையில் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. ஏசி சரியாக வேலை செய்யவில்லை. இதனால், விமானத்தில் இருந்த குழந்தைகள், முதியவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அவதி அடைந்தனர். அசவுகரியம் காரணாக விமானத்தில் இருந்து வெளியேறி செல்ல பயணிகள் சிலர் அனுமதிகேட்டனர். ஆனால், அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த குழப்பத்திற்கு மத்தியில் பணி நேர கட்டுப்பாடு எனக்கூறி விமானி சென்றுவிட்டார். மாற்று விமானி காலை 11 மணிக்கு வந்தார். பின்னர் 12 மணிக்கு தான் விமானம் கிளம்பி சென்றது எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டைமறுத்துள்ள இண்டிகோ நிறுவனம், பயணிகளிடம் தாமதம் குறித்து உரிய விளக்கம் அளித்துவிட்டோம். காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us