sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழில்துறையினர்

/

தொழில்துறையினர்

தொழில்துறையினர்

தொழில்துறையினர்


ADDED : பிப் 02, 2025 01:20 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சக்திவேல், துணை தலைவர், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,):

ஜவுளித்தொழில் புத்துயிர் பெற, தரமான பருத்தியையும், நிலையான வினியோகத்தையும் உறுதி செய்கிறது. வலுவான வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது.

சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்:

பிணையில்லா கடன் உச்சவரம்பு, 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது; புதிய 'ஸ்டார்ட் அப்'களுக்கான கடன், 20 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, 20 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ., அடிப்படை உச்சவரம்பு உயர்த்தியுள்ளது வரவேற்புக்குரியது.

'டர்ன் ஓவர்' அடிப்படையில், 250 கோடி என்பது, 500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; முதலீடு அடிப்படையில், 50 கோடி என்பது, 125 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பருத்தி உற்பத்திக்கான ஐந்தாண்டு திட்டத்தை வரவேற்கிறோம். ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் அறிவித்துள்ளது, ஜவுளி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும்; ஏற்றுமதியாளருக்கு கடன் சலுகைகள் கிடைக்கும்.

***

ஈஸ்வரன், தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா), திருப்பூர்:

லித்தியம் பேட்டரிக்கு சுங்கவரி ரத்து செய்வதால், குறு, சிறு தொழில்கள் அதிகரிக்கும்; மின் வாகனங்கள் உற்பத்தி அதிகரிக்கும். தொழில்நுட்ப ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

***

இளங்கோவன், தலைவர், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு (அபாட்):

செயற்கை நுாலிழை துணி இறக்குமதிக்கு, கிலோவுக்கு, 115 ரூபாய் வரி விதிக்கப்பட்டதால், உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்படும். பெண்களை தொழில் முனைவோராக உயர்த்தும் புதிய திட்டம் நல்ல மாற்றத்தை உருவாக்கும்.

***

உலக தலைமைக்கு முன்னேடுக்கும்!

சென்னை:அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி:

அடுத்த ஐந்தாண்டுகளில், 75,000 மருத்துவ இடங்கள் அதிகரித்தல், செயற்கை நுண்ணறிவு ஒப்புயர்வு மையம், தனியார் மருத்துவ பங்களிப்புடன், மருத்துவ சுற்றுலா மேம்படுத்துல், இந்தியாவில் நலம் பெறுங்கள் உள்ளிட்ட திட்டங்கள், மருத்துவ கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 200 புற்றுநோய் மையங்கள் அமைப்பது, நோயாளிகள் பயன்பெறக்கூடிய அறிவிப்பாக உள்ளது.

பஜ்ஜெட் பேட்டி : நிதியில் சுயவிளம்பரம்

எஸ். ஆனந்த், 45, சமூக ஆர்வலர், மணலி:

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஒருபுறமிருப்பினும், அப்படி ஒதுக்கும் நிதிகளை, மாநில அரசு சுயவிளம்பரம், இலவச திட்டங்களுக்கே பயன்படுத்துகிறது. இதனால், பஜ்ஜெட்டில் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக நிதி ஏதும் ஒதுக்குவதில்லை. மாநில அரசு இலவச திட்டங்களுக்கான செலவுகளை குறைக்க வேண்டும். கடன் சுமை ஏறிக் கொண்டே செல்கிறது. இலவச பேருந்து பயண திட்டம் அவசியமற்றது. அதற்கு பதிலாக, பள்ளி செல்வதற்கு பேருந்து வசதிகள் இல்லாமல், பல கி.மீ., துாரம் பயணிக்கும், மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தலாம்.






      Dinamalar
      Follow us