sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தொழில் துறை சந்தேகத்துக்கு தீர்வு 'இண்டஸ்ட்ரி சேலஞ்ச் பிளாட்பார்ம்'

/

 தொழில் துறை சந்தேகத்துக்கு தீர்வு 'இண்டஸ்ட்ரி சேலஞ்ச் பிளாட்பார்ம்'

 தொழில் துறை சந்தேகத்துக்கு தீர்வு 'இண்டஸ்ட்ரி சேலஞ்ச் பிளாட்பார்ம்'

 தொழில் துறை சந்தேகத்துக்கு தீர்வு 'இண்டஸ்ட்ரி சேலஞ்ச் பிளாட்பார்ம்'


ADDED : மார் 03, 2026 12:31 AM

Google News

ADDED : மார் 03, 2026 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கும், 'இண்டஸ்ட்ரி சேலஞ்ச் பிளாட்பார்ம்' என்ற போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில், தொழில்நுட்ப ஜவுளிக்கான தேவை அதிகரித்து வருவதால், பல நாடுகள், அத்தகைய ஜவுளி உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. உலகளாவிய, தொழில்நுட்ப ஜவுளி வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பு, 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி தொடர்பான சந்தேகங்களுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைப்பதில்லை.

இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், 'இண்டஸ்ட்ரி சேலஞ்ச் பிளாட்பார்ம்' என்ற புதிய போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினர், தங்களது சந்தேகங்களை, போர்ட்டலில் பதிவு செய்தால், அதற்கான பதிலும், வழிகாட்டுதலும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ஜவுளித்துறை வழிகாட்டுதலில் இயங்கும், 'திருப்பூர் நிப்ட் -டீ அடல் இன்குபேஷன்' மைய தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், தொழில்நுட்ப ஜவுளி, விளையாட்டு ஆடை தொடர்பான சந்தேகங்களுக்கு, உடனடி விளக்கம் அளிக்கும் 'இண்டஸ்ட்ரி சேலஞ்ச் பிளாட்பார்ம்' என்ற போர்ட்டலை அறிமுகம் செய்துள்ளது.

அடிப்படை விபரங்களுடன், தங்களது கேள்வி களை பதிவு செய்தால், அதற் கான பதில் ஏ.ஐ., உதவியுடன் உடனே வழங்கப்படும். இதுவரை இல்லாத புதிய பிரச்னையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் வாயிலாக தீர்வு கண்டறிந்து, அவ்விபரம் பகிரப்படும்.

இந்திய தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில், இது மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி குறித்த சந்தேகங்களுக்கென 'இண்டஸ்ட்ரி சேலஞ்ச் பிளாட்பார்ம்' போர்ட்டல் சந்தேகங்களை, போர்ட்டலில் பதிவு செய்தால், அதற்கான பதிலும் வழிகாட்டுதலும் வழங்கப்படும்






      Dinamalar
      Follow us