உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 29, 2026 10:56 PM
அ நிறம் | அளவு
வந்தவாசி: வந்தவாசி அருகே, பால் குடித்தபோது மூச்சுத்திணறி, ஒரு மாத ஆண் குழந்தை பலியானது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, வெளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி ஜெயசூர்யா, 27. இவரது மனைவி சித்ரா, 23. இவருக்கு, ஒரு மாதம் முன் ஆண் குழந்தை பிறந்தது.
இன்று (அக்.,29) குழந்தையை அழைத்து கொண்டு வெளியூர் செல்ல, இருவரும் வந்தவாசி பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர். அப்போது குழந்தை தாய் பால் குடித்தபோது, திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார். வந்தவாசி தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
