ADDED : அக் 24, 2025 12:52 AM
சென்னை:சென்னையிலிருந்து, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதுக்கு சார்மினார் விரைவு ரயில் தினமும் இயக்கப்படுகிறது. தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைக்கும் வகையில், இந்த விரைவு ரயில் இயக்கப்படுவதால், எப்போதும் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஹைதராபாதில் இருந்து வழக்கம் போல், நேற்று மாலை 6:00 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டது. அனைத்து பெட்டிகளிலும் பயணியர் கூட்டம் நிரம்பி இருந்தது. இரவு 8:00 மணிக்கு பின், எஸ்3, எஸ்4, ஸ்லீப்பர் பெட்டிகளில், கருப்பு நிறத்தில் சிறிய பூச்சிகள், இருக்கைகள் மீது ஓடின. இதனால், பயணியர் இரவில் துாக்கமின்றி அவதிப்பட்டனர்.
இது குறித்து, டிக்கெட் பரிசோதகரிடம் கேட்ட போது, 'பராமரிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்படும்' எனக்கூறினார். பயணியர் நலன் கருதி, ரயில் பெட்டிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

