sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டீ கடை பெஞ்ச்: நுண்ணறிவு பிரிவு அதிகாரியின் நூதன வசூல்!

/

டீ கடை பெஞ்ச்: நுண்ணறிவு பிரிவு அதிகாரியின் நூதன வசூல்!

டீ கடை பெஞ்ச்: நுண்ணறிவு பிரிவு அதிகாரியின் நூதன வசூல்!

டீ கடை பெஞ்ச்: நுண்ணறிவு பிரிவு அதிகாரியின் நூதன வசூல்!


ADDED : பிப் 01, 2024 12:31 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''வெட்டியா நிப்பாட்டி வச்சிருக்காவ வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''என்னத்தைங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மின் வாரியத்தின், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகள்ல, உயர் அழுத்த மின் பாதை ஆய்வு, டிரான்ஸ்பார்மர் ஆய்வு மற்றும் பழுது நீக்கத்துக்காக, நவீன உபகரணங்கள் பொருத்திய நடமாடும் ஆய்வகத்தை வாங்குனாவ வே...

''உடுமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துல, இதுக்கு தனி கட்டமைப்பும் உருவாக்குனாவ... பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த வாகனத்தை முறையா பயன்படுத்தாம, நாலு வருஷமா சும்மாவே நிக்குது வே... ''இதுக்கு தனி கட்டடம், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், டிரைவர், பணியாளர்னு ஒரு குழுவே இருந்தும், அவங்க எந்த வேலையும் செய்யாம, சம்பளம் மட்டும் வாங்கிட்டு இருக்காவ...

''அதே நேரம், ஆய்வு பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, மாதம் பல லட்சம் ரூபாயை கட்டணமா கட்டுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''இதே மாதிரி என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்குது... இதுல, 15 ஆண்டுகள் ஆன பாதிக்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை கழிவு நீக்கம் பண்ணிட்டா ஓய்...

''இந்த வாகனங்களை இயக்கிய, 12க்கும் மேற்பட்ட அரசு டிரைவர்கள், வேலை செய்யாம, மாதம், 60,000 ரூபாய் வரைக்கும் சம்பளம் வாங்கறா... இந்த சூழல்ல, ஊரக வளர்ச்சி துறையில உள்ள வாகனங்களை இயக்க, தினக்கூலி அடிப்படையில், எட்டு பேரை சமீபத்துல டிரைவர்களா நியமிச்சு, மக்கள் வரிப்பணத்தை வீணடிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''வசூல்ல புகுந்து விளையாடுறாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல, நுண்ணறிவு பிரிவு உயர் அதிகாரியா இருக்கறவர் கட்டுப்பாட்டுல, 40க்கும் மேற்பட்ட போலீசார் இருக்காங்க... இவங்க பணியாற்றும் ஸ்டேஷன்ல இருக்கிற போலீசார் செய்ற தவறுகளை, அதிகாரியிடம், 'ரிப்போர்ட்' செய்வாங்க பா...

''இப்படி வர்ற ரிப்போர்ட்கள்ல சிக்குற போலீசார் மீது நடவடிக்கை எடுக்காம இருக்க, அவங்களிடம் பேரம் பேசி பெரிய தொகையை அதிகாரி கறந்துடுறாரு... சமீபத்துல, குன்றத்துார் கலால் அதிகாரி ஒருத்தர் மேல, நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர், அதிகாரியிடம் ரிப்போர்ட் தந்தாரு பா...

''கலால் அதிகாரியை கூப்பிட்டு, வாங்க வேண்டியதை வாங்கிய அதிகாரி, அவரை பத்தி ரிப்போர்ட் தந்த போலீஸ்காரரை வேற ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாரு... ''இது போக, புறநகர் பகுதியில முக்கிய பிரமுகர்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் தரவும், ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களுக்கு பி.எஸ்.ஓ., போலீசாரை நியமிக்கவும், அதிகாரி தனியா வசூல் நடத்துறாரு...

''அதிகாரி கடந்த ஆறு வருஷமா கூடுவாஞ்சேரி, குன்றத்துார் உள்ளிட்ட பகுதிகள்ல பணியில் இருந்ததால, பார் உரிமையாளர்கள், கஞ்சா வியாபாரிகள்னு எல்லாரிடமும் தனியா ஆள் போட்டு வசூல் பண்ணிட்டு இருக்காரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''ரவிச்சந்திரன் இப்படி உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என்றபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us