தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வாயு கசிவு விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்

 வாயு கசிவு விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்

 வாயு கசிவு விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்


ADDED : ஜூன் 24, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், கடந்த 21ம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையி ல், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அசாம் மாநிலத்தை சேர்ந்த அஞ்சிலா சோரன் என்பவர் நேற்று உயிரிழந்தார். உயிரிழந்தோர் எண்ணிக்கை, ஒன்பதாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த தொழிலக பாதுகாப்பு இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து, முதல்வர் விஜய் உத்தரவிட்டா ர்.

அமோனியா வாயு கசிவு தொ டர்பாக ஆய்வு செய்து, 24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கை வழங்கவும், மூன்று நாட்களில் முழு அறிக்கை வழங்கவும், மூவர் குழுவுக்கு உத்தர விடப்பட்டது.

இந்நிலையில், இடைக்கால அறிக்கையை நேற்று, முதல்வர் விஜயிடம் மூவர் குழு சமர்ப்பித்துள்ளது.

இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது; பாதுகாப்பு குறைபாடு எதேனும் நடந்ததா; அளவிற்கு அதிக மாக அமோனியா வாயு சேமிக்கப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு விபரங்கள், அதில் இடம்பெற்று உள்ளன.

இதற்கிடையே, வாயு கசிவால் உயிரிழந் தவர்களின் உடல்கள் நேற்று, அவர் களது உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us