ADDED : செப் 30, 2024 05:22 AM

திருபுவனை: புதுச்சேரியில் நடந்த சர்வதேச அளவிலான பாரம்பரிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
இந்திய இளையோர் பாரம்பரிய சிலம்ப சங்கம் சார்பில், சர்வதேச அளவிலான பாரம்பரிய சிலம்பம்சாம்பியன்ஷிப் போட்டி,புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள வினாயகர் தொழில்நுட்பக் கல்லுாரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. போட்டியில்,2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் எடை பிரிவுகளின் கீழ் போட்டிகள் இரண்டு நாட்கள்நடத்தப்பட்டது.
போட்டிநிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற 228 பேருக்கு,இந்திய இளையோர் பாரம்பரிய சங்க நிர்வாகிகள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.