சர்வதேச போதைப்பொருள் கடத்தல் 'குருவி' சிக்கியது; விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் 'குருவி' சிக்கியது; விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்
ADDED : ஜன 29, 2025 12:52 PM

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் 'குருவி'யாக செயல்பட்ட பெண் உட்பட 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. சோதனையில், ரூ.23.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தாய்லாந்தில் இருந்து குளிர்பான பவுடர் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது விசாரணையில் அம்பலம் ஆனது. இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 3 பேரையும் தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தியதில், அவர்கள் கடத்தலுக்கு 'குருவி'யாக செயல்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. கடத்தலுக்கு முக்கிய தலைவனாக உள்ளவரை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.