தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஓமலுார் ஜி.ஹெச்., டாக்டரிடம் விசாரணை

ஓமலுார் ஜி.ஹெச்., டாக்டரிடம் விசாரணை

ஓமலுார் ஜி.ஹெச்., டாக்டரிடம் விசாரணை


ADDED : ஜன 01, 2024 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2024 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார் : சேலம் மாவட்டம், ஓமலுார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் நாகபுஷ்பராணி, 59. மருத்துவமனை சமூக பங்களிப்பு வாயிலாக பல நிறுவனங்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளன.

மேலும், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிதி வாயிலாக, மருத்துவ மனைக்கு தளவாட பொருட்கள் வாங்கப்பட்டுஉள்ளன.

இவர் பொறுப்பேற்ற பின், தளவாட பொருட்கள் வாங்கியதில், கமிஷனுக்காக கூடுதல் நிதி செலவு செய்யப்பட்டதாக, மருத்துவ துறைக்கு புகார் சென்றது. இது தொடர்பாக, ஏற்கனவே மூன்று முறை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், நான்காவது முறையாக அவரிடம், கோவை மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணி இணை இயக்குனர் ராஜசேகரன், ஓமலுார் மருத்துவமனையில் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, மருத்துவர், செவிலியர், அலுவலக பணியாளர், நோயாளிகளிடம் விசாரித்து, ஆவணங்களை பார்வையிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us