உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 05, 2026 04:05 AM

அ நிறம் | அளவு
தேனி: கடந்த சில ஆண்டுகளாக ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளது.
இதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க பால் உப பொருட்கள் தயாரிப்பில் ஆவின் அதிக கவனம் செலுத்துகிறது. தற்போது புதிதாக ரூ.1க்கு சாக்லேட் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 240 சாக்லேட்கள் கொண்ட பிளாஸ்டிக் ஜார் மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ. 207.80க்கும், சில்லரை விற்பனையாளர்களுக்கு ரூ.218.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரோஸ்மில்க் தயாரித்து விற்பனை செய்ய ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
