ADDED : ஜன 22, 2025 12:47 AM

புதுடில்லி:'கியா' நிறுவனம், 10 கார்களை காட்சிப்படுத்தியது. அதில், எட்டு இன்ஜின் கார்கள், இரண்டு மின்சார கார்கள். 'இ.வி., - 6' மின்சார எஸ்.யூ.வி., கார் மேம்படுத்தப்பட்டு, மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
வழக்கம் போல வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனையாகும் இந்த கார், ரியர் வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் என்ற இரு வகையிலும் வருகிறது.
பாஸ்ட் சார்ஜர்
இதன் டிசைனை பொறுத்தவரை எந்த மாற்றங்களும் இல்லை என்றாலும், புதிய, 19 அங்குல அலாய் சக்கரங்கள், பம்பர் மற்றும் கிரில் போன்றவற்றில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இம்முறை, பெரிய 84 கி.வாட்.ஹார்., பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. பேட்டரி திறன், 7 கி.வாட். ஹார்., அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு சார்ஜில், 650 கி.மீ., வரை பயணம் செய்ய முடியும். பாஸ்ட் சார்ஜர் வாயிலாக 80 சதவீதம் சார்ஜ் செய்ய, வெறும், 18 நிமிடங்கள் மட்டுமே தேவை.
அடாஸ் பாதுகாப்பில், கூடுதலாக ஐந்து புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம், 29 அம்சங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும், 12 லட்சம் கியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட நகரங்களில், 700க்கும் அதிகமான விற்பனை மையங்களை இந்நிறுவனம் அமைத்துள்ளது.