sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அம்மன் கோவில் ஆடி சுற்றுலா முதியோர்களுக்கு அழைப்பு

/

அம்மன் கோவில் ஆடி சுற்றுலா முதியோர்களுக்கு அழைப்பு

அம்மன் கோவில் ஆடி சுற்றுலா முதியோர்களுக்கு அழைப்பு

அம்மன் கோவில் ஆடி சுற்றுலா முதியோர்களுக்கு அழைப்பு


ADDED : ஜூன் 14, 2025 06:27 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அறிக்கை:

கடந்த ஆண்டு ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு, 1,003 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருத்தலங்களுக்கு, 1,008 பக்தர்களும் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்பட்டனர். இந்தாண்டு ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு, 2,000 பக்தர்கள் ஆன்மிக பயணமாக அழைத்துச் செல்லப்படுவர் என்று, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு மற்றும் திருநெல்வேலியை தலைமையிடமாக வைத்து, வரும் ஜூலை, 18, 25, ஆக.,1, 8, 15ம் தேதிகளில், 2000 பேர் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இந்த ஆன்மிக பயணம் செல்ல விரும்புவோர், ஹிந்து மதத்தினராகவும், 60- - 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

உடல் தகுதிக்கான மருத்துவ சான்று, ஆதார் அல்லது பான் கார்டு நகல் இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை கமிஷனர் அலுவலகங்களில் நேரில் பெறலாம் அல்லது www.hrce.tn.gov.in என்ற அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ஜூலை, 11க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களை, 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us