ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட மோசடி: ரூ.1.09 கோடி பறிமுதல்; 7 பேர் கைது
ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட மோசடி: ரூ.1.09 கோடி பறிமுதல்; 7 பேர் கைது
ADDED : ஏப் 12, 2025 10:31 AM

கோவை: கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ரசிகர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை பயன்படுத்தி அவர்களை பல வகையிலும் மோசடி செய்வது தொடர்ந்து நடக்கிறது. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்த குமார், விபுல், ஜிதேந்திரா, விபின் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி ரொக்கம், இரண்டு கார்கள், இரண்டு பைக்குகள்,12 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அவர்களிடம் போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.