தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ., ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ., ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ., ஐ.பி.ஓ.,


ADDED : ஆக 15, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரூ.583 கோடி நிதி திரட்டும் 'ஸ்கைவேஸ் ஏர் சர்வீசஸ்'


வி மான சரக்கு போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இருக்கும் 'ஸ்கைவேஸ் ஏர் சர்வீசஸ்', தனது நிறுவன கடன்களை குறைக்கவும், நிதிநிலையை பலப்படுத்தவும் 583 கோடி ரூபாய் நிதி திரட்ட ஐ.பி.ஓ., வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

முக்கிய அம்சங்கள்

ஐ.பி.ஓ., காலம் : ஆகஸ்ட் 24 - 27 வரை

பங்கு விலை வரம்பு : ரூ.131 - 138 வரை

குறைந்தபட்ச முதலீடு : 100 பங்குகள்

புதிய பங்குகள் வெளியீடு : 2.89 கோடி பங்குகள் (ரூ.399 கோடி)

ஆபர் பார் சேல் : 1.33 கோடி பங்குகள் (ரூ.184 கோடி)

பட்டியல் நாள் : செப்டம்பர் 1, 2026

பட்டியலிடப்படும் சந்தைகள் : பி.எஸ்.இ., மற்றும் என்.எஸ்.இ.,

ரூ.3,000 கோடி நிதி திரட்டும்

'சுதந்த்ரா மைக்ரோபின் நிறுவனம்'

தொ ழிலதிபர் அனன்யா பிர்லா மற்றும் ஆன்டிமேட்டர் மீடியா நிறுவனத்தின் 'சுதந்த்ரா மைக்ரோபின் நிறுவனம்', 3,000 கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில் முதற்கட்ட ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

புதிய பங்குகள் வெளியீடு : ரூ.1,500 கோடி

ஆபர் பார் சேல் : தற்போதைய முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் 1,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்து வெளியேறுகின்றனர்.

நோக்கம் : தனது மூலதனத்தை வலுப்படுத்தவும், அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

ரூ.2,600 கோடி நிதி திரட்டும்

'ெஸட்வெர்க் மேனுபேக்ச்சரிங் பிசினஸ்'

தொ ழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி துறையில் இருக்கும் 'ஸெட்வெர்க் மேனுபேக்ச்சரிங் பிசினஸ்' நிறுவனம், 2,600 கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில், தனது ஐ.பி.ஓ., திட்டத்திற்கான ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

புதிய பங்குகள் வெளியீடு : ரூ.2,600 கோடி

ஆபர் பார் சேல் : தற்போதைய பங்குதாரர்கள் மற்றும் நிறுவனர்கள் சார்பில் 9.68 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன

நோக்கம்: திரட்டப்படும் நிதியில் இருந்து, நிறுவனத்தின் கடன்களை திரும்ப செலுத்த 1,250 கோடி ரூபாயையும், துணை நிறுவனங்களின் கடன்களை குறைப்பதற்கு 550 கோடி ரூபாயையும், நிறுவன கையகப்படுத்துதல் மற்றும் பொது பயன்பாடுகளுக்கு மீதமுள்ள தொகையை பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us