தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ரவியை வட்டமடிக்கும் ஐ.பி.எஸ்.,கள்

 ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ரவியை வட்டமடிக்கும் ஐ.பி.எஸ்.,கள்

 ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ரவியை வட்டமடிக்கும் ஐ.பி.எஸ்.,கள்


ADDED : மே 05, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'சட்டசபை தேர்தலில், த.வெ.க., 41 சதவீத ஓட்டுகள் பெற்று, தனிப் பெரும்பான்மையு டன் விஜய் ஆட்சி அமைப்பார்' என, கருத்து கணிப்பு வெளியிட்ட, ஓய்வுபெற்ற டி.ஜி .பி., ரவி வாயிலாக, புதிய பதவிகளை பிடிக்க, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் காய் நகர்த்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த, 1991ம் ஆண்டு, தமிழக காவல் துறை ஐ.பி.எஸ்., அதிகாரியான ரவி, 32 ஆண்டுகள் பணிபுரிந்து, டி.ஜி.பி., ரேங்கில், 2022ல் ஓய்வு பெற்றார்.

சட்டசபை தேர்தலையொட்டி தொகுதிக்கு, 10 பேர் என, ஓய்வுபெற்ற போலீசார், 2,340 பேர் வாயிலாக, 2.34 லட்சம் பேரிடம் கருத்து கணிப்பு நடத்தி, அதன் முடிவை அறிவித்தார்.

அப்போது, த.வெ.க., 41 சதவீத ஓட்டுகள் பெற்று, 121 தொகுதிகளில் வென்று, தனிப் பெரும்பான்மையுடன் விஜய் ஆட்சி அமைப்பார் என, 'வீடியோ' வெளியிட்டார்.

இதையடுத்து, 'தி.மு.க., கூட்டணி யில் போட்டியிட, ரவி, 'சீட்' கேட்டார். கிடைக்காத விரக்தியில், தி.மு.க.,வுக்கு எதிராக பேசுகிறாார்.

'அவர், த.வெ.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர் செங்கோட்டை யனின் நெருங்கிய உறவினர். அதனால் த.வெ.க., ஆட்சியை பிடிக்கும் என கூறுகிறார்' என, ரவி மீது கடும் விமர்சனம் எழுந்தது.

ஆனால், ரவி கணித்தபடி த.வெ.க., 40 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் பெற்று, சாதனை படைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவருக்கு பக்கபலமாக இருப்பவர்களில் ரவியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்தல் கமிஷன் தான், சென்னை மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர்களை நியமனம் செய்துள்ளது.

' புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின், போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றம் செய்யப்படுவர். இதனால், புதிய பதவிகளை பிடிக்க, தற்போதுள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ரவியின் உதவியை பெற முயற்சித்து வருகின்றனர்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us