உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 03, 2026 11:58 PM

அ நிறம் | அளவு
சென்னை: 'அறநிலையத்துறை கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக புகார் அனுப்பலாம்' என, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுதும், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடக்கும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், கோவில் பணிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கு லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான புகார்களை, எனக்கு நேரடியாக தெரிவிக்கலாம்.
தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளிக்க வேண்டும். நானும், எனது அலுவலகமும் நேரடியாக, இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம். புகார்களை, ministerhrce@tn.gov.in என்ற 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
