sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான்?

/

கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான்?

கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான்?

கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான்?

25


UPDATED : ஜூலை 26, 2025 01:21 PM

ADDED : ஜூலை 26, 2025 01:00 PM

Google News

UPDATED : ஜூலை 26, 2025 01:21 PM ADDED : ஜூலை 26, 2025 01:00 PM

25


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தான் தயாரிக்கும் இசை ஆல்பத்தில் கடவுள் சிவனாக நடிக்கிறார் மன்சூர் அலிகான். ஆல்பத்திற்கு 'அகம் பிரம்மாஸ்மி' (நானே கடவுள்) என்று பெயர் வைத்துள்ளார். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய, மாற்று மதத்தை சார்ந்த இவர் ஹிந்து கடவுள் வேடமிட்டு நடிப்பது ஏன் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆல்பத்தில் கடவுள் சிவனை இவர் எப்படி காட்டுகிறார் என்பது பற்றிய தகவல் இதுவரை இல்லை.

அவ்வப்போது மற்றவர்களை வம்பு இழுத்து, சர்ச்சையாக பேசி, எதையாவது வித்தியாசமாக செய்து, அதன் மூலமாக பப்ளிசிட்டி தேடிக் கொள்பவர் நடிகர் மன்சூர் அலிகான். இப்போது அவர் கடவுள் சிவனை வம்பு இழுக்கிறார். ஆம், சமஸ்கிருத மந்திரங்கள் பயன்படுத்தி பாடல் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, இயக்கி, ஒரு ஆல்பம் தயாரித்துள்ளார். அந்த ஆல்பத்தின் பெயர் 'அகம் பிரம்மாஸ்மி'.

Image 1448129

இந்த ஆல்பம் விரைவில் வெளியாக போகிறது. அந்த ஆல்பத்தில் மன்சூர் அலிகானே சிவனாக நடித்துள்ளார். அந்த போட்டோக்கள் வெளியாகி உள்ளன. இதற்கு ஹிந்து அமைப்புகள், ஹிந்து மத நம்பிக்கை உடையவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கி உள்ளனர்.

மன்சூர் அலிகான் யார்? அவர் பின்னணி, செயல்பாடுகள் எப்படி இருக்கும் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் சிவனாக நடித்து, அகம் பிரம்மாஸ்மி ஆல்பத்தில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன?

சமீபத்தில் அவர் மகன் போதை விவகாரத்தில் உள்ளே சென்றவர். நில மோசடி உள்ளிட்ட விவகாரங்களில் இவரும் சிறை சென்று இருக்கிறார். அப்படிப்பட்டவர் கடவுள் சிவனாக நடித்து வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடவுள் சிவனை இவர் எப்படி காட்டுகிறார் என்று தெரிந்தால் தான் இவரது நோக்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்று பலரும் காத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us