ADDED : ஜன 20, 2025 06:23 AM

விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடந்த பொது மருத்துவ முகாமை துவக்கி வைத்து, அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:
சென்னை ஐ.ஐ.டி.,யில் இயக்குனராக உள்ளவர், பல்வேறு விஷயங்கள் தெரிந்தவர். மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்று, எதற்காக பேசினார் என தெரியவில்லை.
நவீனமயமான மருத்துவத்தால், அத்துறையே மேம்பட்டுள்ளது. அவற்றைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். பழங்காலங்களில் பசு கோமியம் புனிதமானது என வாசலில் தெளிப்பர்; அவ்வளவு தான்.
ஆனால், அதை குடிப்பது நல்லதல்ல. புதுமையாக சொல்ல வேண்டும் என, எதையாவது சொல்கின்றனர்.
தமிழகத்தில் எல்லோருக்கும் மருத்துவ வசதிகள் சென்று சேர வேண்டும் என்பது தான் முதல்வரின் எண்ணமும், செயல்பாடும்.
கோமியம் குடிப்பது குறித்து, பத்திரிகைகள் தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஐ.ஐ.டி., இயக்குனரின் கோமிய யோசனை சங்கடமாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.