தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மாரத்தான் ஓட்டத்துக்கு மட்டும்தான் முக்கியத்துவமா?

மாரத்தான் ஓட்டத்துக்கு மட்டும்தான் முக்கியத்துவமா?

மாரத்தான் ஓட்டத்துக்கு மட்டும்தான் முக்கியத்துவமா?


ADDED : பிப் 05, 2025 07:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 07:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாரத்தான் ஓட்டத்திற்கு கொடுக்கும் கவனத்தை, மக்கள் நலனில் செலுத்த தயங்குவது ஏன்? சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், மாலை 5:00 மணிக்கு மேல், மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், அங்கு வரும் நோயாளிகளுக்கு, செவிலியர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நிலையில், போதுமான மருத்துவர்களை நியமிக்காமல், நோயாளிகளின் உயிரோடு விளையாடும், தமிழக சுகாதாரத் துறையின் அலட்சியப் போக்கு, கடும் கண்டனத்துக்கு உரியது.

அவசர சிகிச்சைக்காக, இரவு அரசு மருத்துவமனைகளை தேடி வரும் நோயாளிகளை, மருத்துவர்கள் பற்றாக்குறை எனக் கூறி, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால், உரிய நேரத்தில், உரிய சிகிச்சையின்றி, பல நோயாளிகளின் உடல்நிலை பாதிக்கப்படுகின்றன.

எனவே, மருத்துவர் காலியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும்.

தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us