sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈ.வெ.ரா., பற்றி அரசு தேர்வில் கேள்விகள் கேட்பது அறிவார்ந்ததா? சீமான் ஆவேசம்

/

ஈ.வெ.ரா., பற்றி அரசு தேர்வில் கேள்விகள் கேட்பது அறிவார்ந்ததா? சீமான் ஆவேசம்

ஈ.வெ.ரா., பற்றி அரசு தேர்வில் கேள்விகள் கேட்பது அறிவார்ந்ததா? சீமான் ஆவேசம்

ஈ.வெ.ரா., பற்றி அரசு தேர்வில் கேள்விகள் கேட்பது அறிவார்ந்ததா? சீமான் ஆவேசம்

16


ADDED : ஜூலை 18, 2025 03:53 AM

Google News

16

ADDED : ஜூலை 18, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''ஆங்கிலேயர் ஆட்சியில் போராடும் உரிமையாவது இருந்தது. சுதந்திர இந்தியாவில் அந்த உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது,'' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, சீமான் நேற்று சந்திக்க சென்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால், கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுடன் மொபைல் போனில் பேசினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

'வீடு தேடி அரசு' என, பல நுாறு கோடிகளை கொட்டி, தி.மு.க., அரசு விளம்பரம் செய்கிறது. திராவிட கட்சிகள் எப்போதுமே, செய்தி அரசியலை தான் செய்வர். அவர்களுக்கு, சேவை அரசியலோ, செயல் அரசியலோ தெரியாது.

ஆங்கிலேயர் ஆட்சியில் போராடும் உரிமையாவது இருந்தது. சுதந்திரம் பெற்ற இந்தியாவில், போராடுகிற உரிமையைக்கூட மறுக்கின்றனர். அடக்குமுறை ஆட்சி நடக்கிறது.

இப்போதும், மக்கள் சாலையை தேடி வரும் அளவுக்கு, அவர்களுக்கு அவ்வளவு பிரச்னைகள் உள்ளன. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், 'ஒரு லட்சம் போராட்டத்திற்கு, அரசு அனுமதி அளித்துள்ளது' என்கிறார்.

அப்படி என்றால், ஒரு லட்சம் பிரச்னைகளை, தி.மு.க., அரசு அளித்திருக்கிறது என்று அர்த்தம்.

பகுதி நேர ஆசிரியர்கள், அ.தி.மு.க., ஆட்சியில் போராடினர்; நானும் சேர்ந்து போராடினேன்.

அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினும் போராடியதோடு, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம்' என வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றுங்கள் என்று தான் ஆசிரியர்கள் கேட்கின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வில், 'விடியல் பயணம் எப்போது துவங்கியது' என்றும், ஈ.வெ.ராமசாமி குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.

வ.உ.சி., காமராஜர், முத்துராமலிங்க தேவர், நல்லகண்ணு போன்றவர்களை போல், நாட்டின் விடுதலைக்காக ஈ.வெ.ராமசாமி சிறைக்குச் சென்றதில்லை. அப்படி இருக்க, அவர் குறித்த கேள்விகள் அறிவார்ந்தவையா?

இவ்வாறு அவர் கூறினார்.

மூளைச்சாவு வாயிலாக

உறுப்புகள் திருட்டு?

சந்தை பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்ட நாட்டில், மக்களும் ஒரு பண்டம் தான். ஒருவன் நல்லா இருந்தால், இதயம் 4 கோடி ரூபாய்; கண்கள் 1 கோடி ரூபாய்; சிறுநீரகம் 2 கோடி ரூபாய் போகும். பல நுாற்றாண்டுக்கு முன், மூளைச்சாவு என கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? தற்போது நடக்கிறது. இதயத்திற்கு, சிறுநீரகத்திற்கு, கண்களுக்கு என பணக்காரர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர்.

அதனால், பள்ளி மாணவர்கள் இறப்பிலேயே சந்தேகம் எழுகிறது. அவர்களது உறுப்புகள் திருடப்படுகின்றன. வேண்டுமென்றால், மருத்துவமனைக்குச் சென்று, 'உடல்நிலை முடியவில்லை; எனக்கு யாரும் இல்லை' என கூறிவிட்டு படுத்து பாருங்கள்; உறுப்புகள் இருக்காது.

- சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்






      Dinamalar
      Follow us