தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திமுக அணியிலிருந்து இன்று விலகுகிறது மதிமுக?

திமுக அணியிலிருந்து இன்று விலகுகிறது மதிமுக?

திமுக அணியிலிருந்து இன்று விலகுகிறது மதிமுக?

25


ADDED : ஜூன் 27, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 05:51 AM

25


25
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ம.தி.மு.க., உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சி அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



அதில், நிர்வாகிகள் சிலர் பேசியுள்ளதாவது: சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வகையில் நெருக்கடி தரப்பட்டது. மேலும், ராஜ்யசபா எம்.பி., பதவியை, வைகோவுக்கு இரண்டாவது முறையாக வழங்கவில்லை.

அதே நேரத்தில், ராஜ்யசபா எம்.பி., பதவிகள் தே.மு.தி.க.,வுக்கும், காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டன. ம.தி.மு.க.,வை மட்டும் தி.மு.க., அவமதித்ததாக கருதவில்லை. நீண்ட நெடிய அரசியல் அனுபவத்திற்கு நேர்ந்த அவமதிப்பாகவே கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர்.

இதையடுத்து, ம.தி.மு.க., பொதுக்குழு கூ ட்டம், சென்னை அண்ணா நகரில் இன்று நடக்க உள்ளது. அதில், 'இனி வரும் தேர்தல்களில் தனி சின்னத்தில் போட்டியிடுவது; தி.மு.க., கூட்டணியை விட்டு விலகுவது; த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளிப்பது' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

கட்சிக்கு முழுக்கு போட்ட எம்.எல்.ஏ.,
ம.தி.மு.க.,வின் இரு எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான சீர்காழி தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில்செல்வன், கட்சியில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால், அவர் நேற்று நடந்த கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்திற்கு வரவில்லை. கடையநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us