நேத்து ராமர்... இன்னைக்கு முருகனா?: திமுக.,வின் திடீர் பாசம்: சீமான் ‛சுருக்'
நேத்து ராமர்... இன்னைக்கு முருகனா?: திமுக.,வின் திடீர் பாசம்: சீமான் ‛சுருக்'
ADDED : ஆக 04, 2024 06:03 PM

சென்னை: தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களே இருப்பதால், ராமனை தொடர்ந்து முருகனை பயன்படுத்துகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பு ஏற்காதாம். யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருப்பது கேவலம்.
திராவிட மாடல் ஆட்சியை ராமர் ஆட்சி எனக்கூறிய ரகுபதியை திமுக தலைவர்கள் ஒருவரும் கண்டிக்கவில்லை. வாடகை வாய்களும் பேசவில்லை. திடிரென தி.மு.க.,வினருக்கு கடவுள் முருகன் கண்ணுக்கு வந்திருக்கிறார். முருகன் முப்பாட்டன் என நான் கூறிய போது என்னை விமர்சித்து முரசொலியில் கட்டுரை எழுதினர். நாங்கள் வேல் எடுத்தால் மட்டும் தமிழகம் நாடு நாசமாகி விடுமா?
தி.மு.க.,வினரை யார் எதிர்த்தாலும், அவர்களை சங்கி என்று கூறுகிறார்கள். அவர்களை எதிர்த்து யாராவது பேசினால், மோடிக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள். திடீரென முருகன் உங்கள் கண்ணுக்கு வருவதன் காரணம் என்ன? தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களே இருப்பதால், ராமனை தொடர்ந்து முருகனை பயன்படுத்துகின்றனர். முத்தமிழ் முருகன் மாநாட்டில் குறைந்தது 20 நிமிடங்கள் முதல்வர் ஸ்டாலின், முருகனை பற்றி பேசுவாரா அருணகிரி நாதர் எழுதியதை பாட வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.