ADDED : ஜன 01, 2026 02:07 AM

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்த விவகாரம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணைக்கு, த.வெ.க., நிர்வாகிகள் ஆஜராகினோம். அதிகாரிகள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளித்தோம். கரூர் விஜய் பிரசாரத்தில், எந்தெந்த அரசு அதிகாரிகள் தவறிழைத்தனர் என்பது குறித்து விபரமாக விசாரணையில் தெரிவித்தோம். இறந்துபோனோரை உடனடியாக போஸ்மார்ட்டம் செய்தது, அதில் இருக்கும் முரண்பாடுகள், துயர சம்பவம் நடக்காமல் போலீசார் எப்படி தடுத்து இருக்கலாம் என்பது குறித்து, அதிகாரிகளிடம் விளக்கமாக கூறியுள்ளோம். தேவையான ஆதாரங்களையும், ஆவணங்களையும் அளித்துள்ளோம்.
மீண்டும் அழைத்தால், வருவோம். 41 பேர் இறப்புக்கான நீதி கிடைக்க வேண்டும். சி.பி.ஐ., அதிகாரிகள் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வர் என தெரிகிறது. அடுத்தகட்டமாக, த.வெ.க., தலைவர் விஜய்க்கும் சி.பி.ஐ., அதிகாரிகள் சம்மன் அனுப்பப்போவதாக செய்தி பரப்பப்படுவது யூகம்.
- நிர்மல் குமார், இணை பொதுச்செயலர், த.வெ.க.,

