ADDED : டிச 24, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பிராமணர்கள் யாராவது ஒருவர் முருகன் என்று பெயர் வைத்திருந்தால் என்னிடம் அழைத்து வந்து காட்டுங்கள்; நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன்' என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார். கந்தன், குமரன் என ஏராளமான தமிழ் பெயர்கள் கொண்ட பிராமணர்களை நேரில் அழைத்து வந்து காண்பிக்க தயாராக உள்ளோம்.
இதில் சனாதனத்தை எதிர்ப்போம் என்று ஹிந்து மதத்தையும், பிராமண சமூகத்தையும் எதிர்க்கும் திருமாவளவனுக்கு என்ன வந்தது? தீபத்துாணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து விட்டு, முருகனின் வேல் ஏந்துவதற்கு, திருமாவளவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? தேர்தலுக்காக நாடகம் போடுகிறார் திருமா.
ஈ.வெ.ராமசாமி வழியில் வந்தவர் என தன்னை கூறிக்கொள்ளும் திருமாவளவன், தன் தந்தை ராமசாமி பெயரை தொல்காப்பியன் என்று மாற்றி யதற்கு காரணம் என்ன? ராமசாமி என்ற பெயர் அருவருக்கத்தக்கதா?
- சோலைக்கண்ணன், மதுரை மாவட்டத் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி

