தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சிறப்பு விடுமுறை கிடைக்குமா?

 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சிறப்பு விடுமுறை கிடைக்குமா?

 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சிறப்பு விடுமுறை கிடைக்குமா?


ADDED : ஆக 01, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, 10 நாட்கள் முழு சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, முதல்வர் விஜய்க்கு அவர்கள் எழுதியுள்ள கடிதம்: மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்குகின்றன.

மாநிலம் முழுதும், ஆயிரக்கணக்கான அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், கணக்கெடுப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் தங்கள் வழக்கமான பணிகளுடன் இணைந்து, கூடுதல் பொறுப்பை ஏற்று பணியாற்ற உள்ளனர்.

கேரள அரசு, இப்பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்களின் கூடுதல் உழைப்பை மதித்து, அவர்களுக்கு, 20 அரை நாள் சிறப்பு விடுப்பு அல்லது 10 முழு நாள் சிறப்பு விடுப்பு வழங்கி உள்ளது; இது, பாராட்டத்தக்கது.

இதேபோல, தமிழகத்திலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கும், 20 அரை நாள் அல்லது 10 முழு நாள் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us