இளைஞர்களை குறி வைத்து விஜய் நகர்கிறாரா?: வீடியோவில் சிறப்பு அலசல்
இளைஞர்களை குறி வைத்து விஜய் நகர்கிறாரா?: வீடியோவில் சிறப்பு அலசல்
ADDED : பிப் 04, 2024 10:06 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கி விட்டார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் தன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; 2026 சட்டசபை தேர்தலில் ஜெயித்து, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதே இலக்கு என்று விஜய் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், '' தளபதி விஜய் தலைவர் ஆனார். எந்த கட்சிகளுக்கு பாதிப்பு?'' என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. அப்போது இளைஞர்களை குறி வைத்து விஜய் நகர்கிறாரா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.
காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்