sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோடை வெப்பம் தவிர்க்க வழிகாட்டுதல் வெளியீடு

/

கோடை வெப்பம் தவிர்க்க வழிகாட்டுதல் வெளியீடு

கோடை வெப்பம் தவிர்க்க வழிகாட்டுதல் வெளியீடு

கோடை வெப்பம் தவிர்க்க வழிகாட்டுதல் வெளியீடு


ADDED : மார் 10, 2024 06:56 AM

Google News

ADDED : மார் 10, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோடைக்கால வெப்பம் அதிகரித்து உள்ள நிலையில், காலை 11:00 முதல் பிற்பகல் 3:30 மணி வரை, பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்ப்பதுடன், செயற்கை குளிர்பானங் களையும் தவிர்க்க வேண் டும் என, பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடைக்கால வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. வெயிலில் வெளியே வருவோருக்கு இதயப் பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

அதிக உடல் வெப்பநிலையில் மயக்கம் ஏற்பட்டவர்கள், குழப்பமான மனநிலையில் இருப்பவர்களுக்கு, உடனடியாக அவர்களது ஆடையின் மீது குளிர்ந்த நீரை ஊற்றலாம்.

மேலும், 108 மற்றும் 104 எண்களில் மருத்துவ உதவியை நாட வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.

அத்துடன், கோடைக்காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்றக் கூடாதவை குறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

பின்பற்ற வேண்டியவை

 உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லுதல் அவசியம் ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அதிகம் குடித்தல் நல்லது பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுங்கள்; முடிந்தவரை வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருப்பதுடன், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் வெளியே செல்லும் போது, காலணிகளை அணிவதுடன், மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். செய்யக்கூடாதவை மதியம் 11:00 முதல் 3:30 மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது; வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்  சிறிய குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க அறிவுறுத்துங்கள் செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும்.








      Dinamalar
      Follow us