ADDED : அக் 07, 2025 05:05 AM

கரூர் துயர சம்பவத்திற்கு, விஜயோ, அவருடைய கட்சியோ பொறுப்பல்ல; அது ஒரு விபத்து. ஆனாலும், நடந்த சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டியது, விஜயின் கடமை. குற்றத்தை, அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என, த.வெ.க.,வினரிடம் யாரும் சொல்லவில்லை; ஆனால், பொறுப்பை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நியாயமான கருத்துகளை நான் கூறுவதால், தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்கின்றனர். அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட முடியாது. தமிழக முதல்வர் நிதானமாகவும், சரியாகவும் செயல்படுகிறார். அதைச் சொல்வதில் தவறில்லை. கரூர் விபத்துக்கு விஜயை கைது செய்தால், தவறான முன்னுதாரணமாகிடும்.
தமிழகத்தில் மாபெரும் துயரம் ஏற்பட்டுள்ள நேரத்தில் கூட்டணி பேசுவது நாகரிகம் இல்லை. விஜய்க்கு அறிவுரை கூறும் அளவிற்கு, நான் கருத்து கந்தசாமி கிடையாது. கூட்டம் நடத்த, ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் ஒரே மாதிரி அனுமதி வழங்க வேண்டும்.
- தினகரன்,
பொதுச்செயலர், அ.ம.மு.க.,