பா.ஜ.,வுக்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது காங்., வேலையல்ல
பா.ஜ.,வுக்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது காங்., வேலையல்ல
ADDED : டிச 30, 2025 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம் பெற்றிருக்கும் கடன்கள், கல்வி, மருத்துவமனை, பொது போக்குவரத்து, மின் உற்பத்தித் திறன், சமூக பாதுகாப்பு திட்டங்கள், நீண்டகால முதலீடுகள் என பல்வேறு இனங்களுக்காக பயன்படுத்தப்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்தியுள்ளன. வரி வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பு செய்யும் தமிழகத்துக்கு, நிதி பங்கீட்டில் அதற்கேற்ற அளவை மத்திய அரசு அளிப்பதில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகளே கவர்னர் வாயிலாக முடக்கப்படுகின்றன. இவை எதையுமே கவனத்தில் கொள்ளாமல், மனம் போன போக்கில் காங்கிரசாரே விமர்சிப்பது சரியல்ல.
வளர்ச்சி முடிவுகள், ஒருவருக்கான சராசரி குறியீடுகள், வரி பங்களிப்பு- பங்கீடு விகிதம், நிர்வாகத்தின் தரம் ஆகியற்றை வைத்துப் பார்த்தால், தமிழகம் முன்னணியில் இருப்பதை உணரலாம். இதை கருத்தில் கொள்ளாமல், பா.ஜ.,விற்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது காங்., வேலையல்ல.
- ஜோதிமணி, எம்.பி., - காங்.,

