ADDED : நவ 23, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவர்னர் வாயிலாக அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த பா.ஜ., அரசு, அதை டி.ஜி.பி., வாயிலாக நிறைவேற்ற நினைத்தனர். அது முடியவில்லை. நிரந்தர டி.ஜி.பி.,யை ஏன் நியமிக்கவில்லை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேட்கிறார். தமிழகத்தில் பொறுப்பு டி.ஜி.பி., என்பதை அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க., தான்.
கடந்த 2011ல் ராமானுஜத்தையு ம் பின், ராஜேந்திரன் என்பவரையும் பொறுப்பு டி.ஜி.பி.,யாக கொண்டு வந்தது அ.தி.மு.க., தான். இப்போது, பொறுப்பு டி.ஜி.பி., பற்றி பேசி, தன்னை பா.ஜ.,வின் விசுவாசி என்பதை பழனிசாமி நிரூபிக்கிறார். ஆம்ஸ்ட்ராங் வழக்கை சி.பி.ஐ., ஏன் விசாரிக்க கூடாது என கேட்கும் பழனிசாமி, 4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகாரை, சி.பி.ஐ., விசாரிக்க கூடாது என்று நீதிமன்றத்திற்கு ஏன் சென்றார். சி.பி.ஐ.,யை கண்டு தி.மு.க., அரசு என்றுமே அஞ்சியது கிடையாது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கும் தி.மு.க., பயப்படவில்லை. அவசரகதியில் செயல் படுத்தக்கூடாது என்றுதான் கூறுகிறோம். -- ரகுபதி, தமிழக அமைச்சர், தி.மு.க.,

