ADDED : பிப் 01, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் சுந்தரவல்லி அறிவிப்பு:
கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், 2017 - 2019ம் ஆண்டு, தொழிற்பயிற்சி நிலையங்களில், இரண்டாம் ஆண்டு தொழிற்பிரிவில் பயிற்சியாளர்கள் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில், அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் பங்கேற்க இயலாத மற்றும் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு, மார்ச் மாதத்தில் அகில இந்திய துணை தொழில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக, முன்னாள் பயிற்சியாளர்கள், தாங்கள் படித்த நிலையங்களை, வரும் 15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இத்தேர்வு குறித்த தகவல்களை, skilltraining.tn.gov.in, ncvtmis.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.