தொழிலை விட்டு அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு ஏமாற்றம் தான்
தொழிலை விட்டு அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு ஏமாற்றம் தான்
ADDED : ஜன 23, 2025 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணியை துவங்கும். அதேபோல, நமது முதல்வரும் தேர்தல் பணியை துவங்கி உள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் டிபாசிட் இழப்போம் என்பதை அறிந்தே, அமாவாசை போல கனவு காணும் அ.தி.மு.க., பழனிசாமி போட்டியிடவில்லை.
நம்மூரில் மாநாடு நடத்தி, ஒருவர் வேகமாக கட்சி துவங்கியதோடு, பரந்துாரில் மக்களை சந்தித்துள்ளார். தொழிலை விட்டு அரசியலுக்கு வந்த நடிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
புதிதாக கட்சி துவங்கி தமிழக முதல்வராகும் கனவு காணும் நடிகர்களின் ஆசையும் நிறைவேறாது. அவர்களது எண்ணமும் தவிடுபொடியாகும்.
சிலர், ஈ.வெ.ரா.,வை இழிவுபடுத்தி அரசியல் பேசும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வினர் கடமைக்காக என்றில்லாமல், தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்.
பொன்முடி, தமிழக அமைச்சர்