ADDED : பிப் 04, 2024 02:06 AM
சென்னை: ஜாக்டோ ஜியோ சார்பில், வரும், 26ம் தேதி முதல் நடத்தப்படும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என, 'டிட்டோ ஜாக்' கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
'டிட்டோ ஜாக்' என்ற, தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், வரும் 19ம் தேதி முதல் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்வது என, தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பதவி உயர்வு விதிகளை மாற்றும், 243ம் எண் அரசாணையை வரவேற்று, அரசுக்கு ஆதரவாக இன்று நடக்கும் மாநாட்டை, ஆசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும்;
அதேநேரம், 243ம் எண் அரசாணையை கண்டித்து, இன்று கருப்புப்பட்டை அணிந்து, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, டிட்டோஜாக் தெரிவித்துஉள்ளது.
ஜாக்டோ ஜியோ சார்பில், 15ம்தேதி நடக்கும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திலும், வரும், 26ம் தேதி முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திலும் பங்கேற்பது என, டிட்டோ ஜாக் முடிவு செய்துள்ளது.