தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'ஜல் ஜீவன் மிஷன் 2.0' திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

 'ஜல் ஜீவன் மிஷன் 2.0' திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

 'ஜல் ஜீவன் மிஷன் 2.0' திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து


ADDED : ஜூன் 03, 2026 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'ஜல் ஜீவன் மிஷன் 2.0' திட்டத்தை செயல்படுத்த, முதல்வர் விஜய் முன்னிலையில், நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் 2019ம் ஆண்டு முதல், 2024ம் ஆண்டு வரை, முதல் கட்டமாக ஜல் ஜீவன் மிஷன் திட்டம் என்ற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது; இதற்காக, 18,123 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு 9,025 கோடி ரூபாய்; தமிழக அரசு 9,097 கோடி ரூபாய், பங்களிப்பாக வழங்கின. இத்திட்டத்தின் கீழ், 47.7 லட்சம் வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன.

இதன் வாயிலாக, 1.86 கோடி பேர் பயன்பெறும் வகையில், 45 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள், 56 கூட்டு குடிநீர் திட்டங்கள் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அமைச்சரவை ஒப்புதலின்படி, இத்திட்டம் 2028ம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 'ஜல் ஜீவன் மிஷன் 2.0' திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே, நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்ச்சியில், மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் சோமன்னா, புதுடில்லியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாகவும், தமிழக முதல்வர் விஜய் தலைமை செயலகத்தில் இருந்தபடியும் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், பாதுகாப்பான, போதுமான மற்றும் நிலையான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

முதல்வருடன், தலைமைச் செயலர் சாய்குமார், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, ஜல் ஜீவன் மிஷன் திட்ட இயக்குநர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us