ADDED : ஜன 13, 2025 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், 12,632 காளைகள் பங்கேற்க உள்ளன.
மதுரை மாவட்டத்தில், நாளை அவனியாபுரத்திலும், நாளை மறுநாள் பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லுாரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான, 'டோக்கன்' வழங்கும் பணி துவங்கியுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ள காளைகள் எண்ணிக்கை:
அவனியாபுரம் - 2,026
பாலமேடு - 4,820
அலங்காநல்லுார் - 5,786
பதிவு செய்துள்ள மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை:
அவனியாபுரம் - 1,735
பாலமேடு - 1,914
அலங்காநல்லுார் - 1,698