ADDED : ஜன 15, 2024 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பிரதமர் மோடி ஜன.,19ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்தரிசனம் செய்கிறார். இன்று (ஜன., 15) பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். நாளை ( ஜன.,16ல்) கவர்னர் ரவி கோயிலில் உழவாரப்பணியில் பங்கேற்கிறார்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிேஷகம் ஜன.,22ல் நடக்கிறது. இதற்காக பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டுள்ளார். அவர் புனிதப்பயணமாக ஜன.,19ல் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். இங்கிருந்து புனித தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்.
முன்னதாக நாளை கவர்னர் ரவி ராமேஸ்வரம் வருகிறார். காலை 11:00 மணிக்கு கோயிலில் தரிசனம் செய்து துாய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.