ADDED : பிப் 25, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, அ.தி.மு.க.,வினருக்கு இணையாக, பா.ஜ.,வினர் புகழஞ்சலி தெரிவித்துள்ளனர்.
* மத்திய இணை அமைச்சர் முருகன்:
இந்தியாவின் குறிப்பிட்ட சில பெண் அரசியல்வாதிகளில், சக்தி வாய்ந்த பெண்ணாக திகழ்ந்த, மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த தினம் பிப்., 24. தமிழகத்தின் நலனுக்காகவும், எளிய மக்கள் மற்றும் கல்விக்காகவும் ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்திய, அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
* தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத் திட்டங்கள் என்றும் அவரது புகழை கூறும்.
* பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்:
பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என, எளிய மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.