ADDED : ஆக 17, 2011 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'விருதுநகர் மாவட்டம், ஆவுடையாபுரம் கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், ராபியத் பீவி, சுபைதா பீவி, செய்தூண் பீவி மற்றும் வீராச்சாமி ஆகியோர் இறந்த செய்தியை அறிந்து துயருற்றேன்.
அவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காதபடி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட நிர்வாகத்துக்கும், பட்டாசு ஆலை நிர்வாகத்துக்கும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.