5 லட்சம் பேருக்கு வேலையா - அரசு மீது அன்புமணி சந்தேகம்
5 லட்சம் பேருக்கு வேலையா - அரசு மீது அன்புமணி சந்தேகம்
ADDED : செப் 22, 2024 02:59 AM
சென்னை:'தி.மு.க., ஆட்சியில் தனியார் நிறுவனங்களில், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, பா..ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த மூன்றாண்டு கால தி.மு.க., ஆட்சியில், அரசுத் துறைகளில் 68,039 பேருக்கும், தனியார் நிறுவனங்களில் 5 லட்சத்து 8,055 பேருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மின் கட்டண உயர்வை தாங்க முடியாமல், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கோவை மண்டலத்தில் செயல்பட்டு வந்த பல நிறுவனங்கள், வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டன.
உண்மை இவ்வாறு இருக்க, தனியார் துறையில் 5 லட்சம் பேருக்கு வேலை வழங்கியிருப்பதாக அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.
தனியார் துறையில் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் எங்கெங்கு, எப்போது ஏற்படுத்தப்பட்டன. வேலைவாய்ப்பு பெற்ற 5 லட்சம் பேரும் தமிழர்களா. இதில் தமிழக அரசின் பங்களிப்பு என்ன என்பது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.