sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

20 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு நழுவிவிட்டது: அண்ணாமலை கொந்தளிப்பு

/

20 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு நழுவிவிட்டது: அண்ணாமலை கொந்தளிப்பு

20 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு நழுவிவிட்டது: அண்ணாமலை கொந்தளிப்பு

20 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு நழுவிவிட்டது: அண்ணாமலை கொந்தளிப்பு

10


UPDATED : நவ 15, 2025 02:58 PM

ADDED : நவ 15, 2025 02:57 PM

Google News

10

UPDATED : நவ 15, 2025 02:58 PM ADDED : நவ 15, 2025 02:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தென்கொரியாவை சேர்ந்த வாசவுங் பன்னாட்டு நிறுவனம் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதால் தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழக முதல்வர் ஸ்டாலினும், தொழில் துறை அமைச்சரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நிலையில், அவர்கள் பெருமையாக அறிவித்த முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு நகர்ந்து வருகின்றன. தென் கொரிய நிறுவனம் வாசவுங் ரூ. 1720 கோடி முதலீட்டில், 20,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பெரிய அளவிலான காலணிகள் உற்பத்தி நிலையத்தை அமைக்க ஒப்புக் கொண்டதாக தமிழக தொழில் துறை அமைச்சர் அறிவித்தார்.

3 மாதங்களுக்குள், இந்த முதலீட்டை ஆந்திரப்பிரதேசத்துக்கு மாற்ற வாசவுங் தீர்மானித்துள்ளது. பிற மாநிலங்கள் உலகளாவிய உற்பத்தியை ஈர்க்க வேகமாக செயல்படும் நேரத்தில், அலட்சியம் மற்றும் நிர்வாகப் பற்றாக்குறையால் தமிழகம் தனது நிலையை இழந்து வருகிறது.

தமிழக ஆட்சி நிர்வாகத்தின் மீதான சாதகமான எண்ணம் இல்லாததால் சர்வதேச நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது. ஒரு காலத்தில் வாய்ப்புகளின் நிலமாக இருந்த தமிழகத்தை, திமுக தவறவிட்ட வாய்ப்புகளின் நிலமாக மாற்றியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர், இபிஎஸ்

அவரது அறிக்கை: கொரிய நாட்டைச் சேர்ந்த வாசவுங் நிறுவனம், தமிழகத்தில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. முதல்வர் , நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என 'ஷோ' காட்டியதால் தமிழகத்திற்கு என்ன பயன்?

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது. இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம், சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள், என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஸ்டாலின் ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?

முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார். இத்தகைய வெறும் Show-off ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்? புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய கையாலாகாத ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழகத்தை தேடி வரும். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us