ADDED : ஜன 04, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அறிக்கை:
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய, வெல்டர், பிட்டர், கிரைண்டர், கேஸ் கட்டர், பைபிங் போர்மேன் உட்பட பல்வேறு பணிகளுக்கு, ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 44 வயதிற்கு மிகாமல், மூன்றாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த விபரங்களை, www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ளோர், ovemclnm@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, தங்கள் சுய விபர படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலை அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு, 95662 39685, 044 - 22502267 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.