ADDED : டிச 14, 2025 12:37 AM
சென்னை: தங்க நகை விற்பனையில் முன்னணியில் உள்ள ஜோய் ஆலுக்காஸ், 'தி சீசன் ஆப் கிப்டிங்' எனப்படும் பண்டிகை கால பிரசாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
நேற்று முன்தினம் முதல், 2026 ஜன., 4 வரை, நாட்டில் உள்ள அனைத்து ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம்களிலும் நடக்க உள்ள இந்த சிறப்பு முயற்சி, பண்டிகை மற்றும் திருமண கால உச்சத்தில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பும், மேம்பட்ட ஷாப்பிங் அனுபவத்தையும் வழங்கும்.
இந்த விளம்பர பிரசாரத்தின் முக்கிய சிறப்பு, நாடு முழுதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச நன்மை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரு முக்கிய சலுகைகளில் அமைந்திருக்கிறது.
வாடிக்கையாளர்கள் பழைய தங்க நகைகளை, 'எக்ஸ்சேஞ்' செய்யும் போது, கிராமுக்கு 250 ரூபாய் கூடுதல் மதிப்பை பெறலாம்.
இது, தங்க நகை தொகுப்பை புதுப்பிக்க விரும்புவோருக்கு, சிறந்த வாய்ப்பாக அமைகிறது. வைரம் மற்றும் வெட்டப்படாத வைர நகைகளின் மதிப்பில், 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது, சான்றளிக்கப்பட்ட, நம்பகமான மற்றும் அழகிய நகைகளை வாங்க சரியான தருணம்.
ஜோய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது:
வாடிக்கையாளர் களிடம் இருந்து எங்களுக்கு கிடைக்கும் நம்பிக்கை, அன்பு, ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் மனப்பூர்வமான வழிதான், 'சீசன் ஆப் கிப்டிங்' இந்த ஆண்டு இறுதி கொண்டாட்டம் மற்றும் பண்டிகை காலத்தில், எங்கள் வாடிக்கையாளர்களின் அனுபவத்தில் அதிக மகிழ்ச்சி, மதிப்பு, சவுகரியத்தை சேர்க்கும் நோக்குடன் இந்த சலுகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எங்கள் ஷோரூம்களில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும், நினைவில் நிற்கும் மற்றும் மகிழ்வூட்டும் ஒரு ஜோய் ஆலுக்காஸ் அனுபவத்தை பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

