கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை
கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை
ADDED : செப் 27, 2024 11:10 PM
நாமக்கல்:“ஏ.டி.எம்., கொள்ளையர்கள் குறித்து, கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த உள்ளோம்,” என சேலம் டி.ஐ.ஜி., உமா கூறினார்.
இதுகுறித்து, நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஏ.டி.எம்., கொள்ளையர்கள், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பல ஏ.டி.எம்., மையங்களில் கொள்ளை அடித்து விட்டு, தங்களது கூட்டாளியான கன்டெய்னர் லாரி டிரைவரிடம் சொகுசு காரை உள்ளே ஏற்றி, அதில் பயணம் செய்தனர்.
இவர்கள், தமிழகத்தின் பல இடங்களில் உள்ள ஏ.டி.எம்.,களில் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து கேரளா, ஆந்திரா, ஹரியானா மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.