sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வங்கதேசத்தில் குறிவைக்கப்படும் ஹிந்துக்களுக்கு துணை நிற்போம் தமிழக அமைப்புகள் கூட்டறிக்கை

/

வங்கதேசத்தில் குறிவைக்கப்படும் ஹிந்துக்களுக்கு துணை நிற்போம் தமிழக அமைப்புகள் கூட்டறிக்கை

வங்கதேசத்தில் குறிவைக்கப்படும் ஹிந்துக்களுக்கு துணை நிற்போம் தமிழக அமைப்புகள் கூட்டறிக்கை

வங்கதேசத்தில் குறிவைக்கப்படும் ஹிந்துக்களுக்கு துணை நிற்போம் தமிழக அமைப்புகள் கூட்டறிக்கை


ADDED : நவ 27, 2024 10:35 PM

Google News

ADDED : நவ 27, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'வங்க தேசத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை, களைய வேண்டும்' என, ஹிந்து இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

சின்மயா மிஷன், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம், விஷ்வ ஹிந்து பரிஷத், வாழும் கலை, மாதா அம்ருதானந்தமயி மடம், ஹிந்து முன்னணி, சபரிமலை ஐயப்பன் சேவா சமாஜம், வித்யா பாரதி, பாரதிய ஸிஷன் மண்டல், அனைத்து மறவர் பொதுநல சங்கம், அனைத்து செட்டியார்கள் முன்னேற்றப் பேரவை, தமிழ்நாடு குறும்பர் மக்கள் முன்னேற்ற சங்கம்.

இந்திய மீனவர் சங்கம், அகில இந்திய வீர வன்னிய குல ஷத்ரிய பாதுகாப்பு சங்கம், அகில இந்திய நாடார் கூட்டமைப்பு, இன்டெக்ரேடட் நேதாஜி அசோசியேஷன், சிவ சாம்பவ சேவா சங்கம், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை உட்பட, பல்வேறு ஹிந்து இயக்கங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:

அச்சம்


'இஸ்கான்' அமைப்பின் தலைவரும், ஹிந்து சமுதாய மக்களின் குரலாக விளங்குபவருமான, சின்மோய் கிருஷ்ணதாசை, வங்க தேச போலீசாரின் உளவுப் பிரிவு கைது செய்திருப்பது, மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த கைது, வங்க தேசத்தில் கருத்து சுதந்திரம், மத நல்லிணக்கம், சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து, அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அங்கு மடாலயங்கள், கோவில்கள் தாக்கப்படுவதற்கு எதிராக, சின்மோய் கிருஷ்ணதாஸ் குரல் கொடுத்தார். கடந்த மாதம் 25ம் தேதி அங்கு நடந்த பேரணியில் கலந்து கொண்டார்.

அவர் மீது தேசத் துரோக குற்றம் சுமத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், நியாயமான முறையில் கோரிக்கை விடுத்ததற்காக, அவரை குறி வைத்து பழிவாங்கும் செயலாக தெரிகிறது.

சின்மோய் கிருஷ்ணதாஸ் மற்றும் அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள், தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு உட்பட்டு, நியாயமான முறையிலும், பாதுகாப்பாகவும் நடத்தப்படுவதை, அந்நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும்.

சர்வதேச மனித உரிமை இயக்கங்கள் இதில் தலையிட்டு, மனித உரிமை மீறல் எதுவும் இல்லாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.

சர்வதேச ஹிந்து இயக்கங்கள், துன்பத்திற்கு ஆளாக்கப்படும் சமயத் தலைவர்களோடும், சமுதாயங்களோடும், தோளோடு தோள் நின்று பாதுகாக்க வேண்டும்.

தேச துரோக சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளும் பாரபட்சமின்றி மதிப்பாய்வு செய்யப்பட்டு, எதிர் கருத்துக்களையும், அமைதியான அறப் போராட்டங்களையும் ஒடுக்குவதற்காக, தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விடுதலை


சட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும் சமய கொடிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை, குற்றமாக்கக் கூடாது. சின்மோய் கிருஷ்ணதாசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாவிட்டால், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

வங்க தேசத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை, களைய வேண்டும்.

இந்த கைதானது, ஜனநாயக கோட்பாடுகளை குழி தோண்டி புதைப்பதுடன், சமயத் தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினர் குரல்வளைகளை நசுக்கும் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்திற்கு வழி வகுக்கிறது.

நாங்கள் அங்கு உள்ள ஹிந்து சமுதாயத்துடன் துணை நிற்கிறோம். நீதி, சமத்துவம் மற்றும் எல்லாருக்குமான சுதந்திரம் ஆகியவற்றுக்காக, குரல் கொடுக்க உறுதி கூறுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us